தமிழ் சினிமாவில் ரஜினி முருகன் படத்தின் மூலம் பிரபலமானவர்கீர்த்தி சுரேஷ்.
தற்போது தனுஷுடன் ரயில் படத்திலும், சிவகார்த்திகேயனின் ரெமோபடத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் விஜய்யின் 60வது படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஆனால் ராம் சரண் நடிக்கும் ‘தனிஒருவன்’ தெலுங்கு ரீமேக், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படம் உட்பட 4 படவாய்ப்பை தவற விட்டுள்ளார்.
இதற்கு காரணம் அவர் கவர்ச்சியாக நடிக்க மறுத்தது தானாம். இவரும் வருகிற காலங்களில் முடிவை மாற்றிக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.