4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை ; பாகிஸ்தானிய படையினர் இருவர் பலி

159

பாகிஸ்தானிய படையினருக்கும் பயங்கரவாத அமைப்பினருக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பயங்கரவாதிகளும், 2 படையினரும் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் பாலுசிஸ்தான்  மாகாணத்தில் கலாத் என்ற இடத்தில் மங்கோசார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் குறித்த மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும் பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து அப் பகுதிக்கு படையினர் விரைந்தனர்.

படையினரை பார்த்ததும் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அவர்களை சரணடையுமாறு பாதுகாப்பு படையினர் வலியுறுத்தினர்.

பாதுகாப்பு படையினரின் கருத்துக்கு செவிசாய்க்காத அவர்கள் தொடர்ந்தும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதனால், படையினரும் அவர்கள் மீது எதிர்த்தாக்குதல் மேற்கொண்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்ப்பட்டதுடன், இரண்டு பேர் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளனர்.

SHARE