4 வயது தங்கையை கற்பழித்த அண்ணன் பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்

247

பிரித்தானியாவில் 4 வயது சிறுமி ஒருவர் தமது 12 வயது சகோதரனால் பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிறுவனின் மொபைல் போனில் பல எண்ணிக்கையிலான ஆபாச காட்சிகள் உள்ளிட்ட படங்களையும் விசாரணை அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Brighton Youth நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில், குறித்த மாணவரால் பொதுமக்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட சாத்தியம் உள்ளதா மற்றும் சிறை தண்டனைக்கு வழிவகை உள்ளதா என்பது குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் முடிவு செய்வார்கள் என தெரிய வந்துள்ளது.

தற்போது 13 வயதாகும் சிறுவன் கடந்த ஓராண்டாக பல முறை அந்த 4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமியே இந்த சம்பவத்தை தமது தாயாருடன் பகிர்ந்துள்ளார், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி குறித்த சிறுவனுக்கு ஒன்றுவிட்ட உடன் பிறந்த சகோதரி ஆவார்.

இருவரும் ஒன்றாகவே தங்களது குடியிருப்பில் விளையாடுவது வழக்கம், இந்த நிலையில் சிறுவன் பலமுறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி இந்த விவகாரத்தை வெளியில் தெரியப்படுத்தாமல் இருக்க சிறுமிக்கு தாராளமாக Skittles தந்து மடக்கியுள்ளான் சிறுவன்.

ஆனால் ஒருகட்டத்தில் சிறுமி தமது தாயாரிடம் இது குறித்து வெளிப்படையாக தெரிவித்ததை அடுத்து இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் எட்டியுள்ளது.

மேலும் தொடர்புடைய சிறுவனுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவும் சிறுவனை கண்காணிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE