40 ஆண்டுகளாக சிரிக்கவே இல்லை! பிரிட்டனின் அதிசய பெண்மணி

358
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார்.பிரிட்டனை சேர்ந்த பெண் டெஸ் கிறிஸ்டியன்(வயது 50).

இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிரிப்பதே இல்லையாம், சிரிப்பதால் முகத்தில் சுருக்கம் வரும் என்பதால் சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பத்து வயதிலேயே நான் இந்த உண்மையைக் கண்டுகொண்டேன். நான் படித்த பள்ளியில் முகத்துக்கு க்ரீம்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

அழகைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சிரிப்பதால்தான் முகத்தில் சுருக்கம் தோன்றி வயதான தோற்றம் வருகிறது. அதனால் சிரிப்பதை விட்டுவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

தற்போது 50 வயதாகியும் இளமையாக இருப்பதற்கு சிரிக்காமல் இருந்ததே காரணம் என கூறி பெருமைப்படுகிறார் டெஸ்.

woman_smile_003

SHARE