எனவே இந்தக் குழு எந்த விடயங்களை கையாளும் என்பது பற்றிய ஒரு திறந்த ஆய்வை லங்காசிறி வானொலி நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா அவர்களுடன் கருத்துப் பகிர்வில் ஈடுபட்டிருந்தது.
இதன் போது இதுவரை உலகின் பார்வைக்கு தெரிய வராத, 2003ம் ஆண்டே விடுதலைப்புலிகள் அழிக்கப்பட போகிறார்கள் என்பது மேற்குலகிற்குத் தெரியும் என்ற புதிய செய்தியை தகுந்த ஆதாரங்களோடு வெளிக் கொணர்ந்தார்.
போர் நடைபெற்று ஐந்து வருடங்களின் பின்னர் இடம்பெறும் இவ் விசாரணைக்கான சம்பவ மற்றும் தடயவியல் சாட்சியங்கள் பல அழிந்து போயிருக்கலாம், மறைக்கப்பட்டிருக்கலாம்.
ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மேற்குலத் தரப்புக்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஆதாரத்தோடு அம்பலப்படுத்த இந்த விசாரணை உதவும்.
இந்த விசாரணைக்கு ஆதார பலமாய் இருக்கப்போவது தாருஸ்மன் குழு அறிக்கை என அழைக்கப்படும் அந்த அறிக்கை 241 பக்கங்களை கொண்டது. இந்த விசாரணைக்கான சாட்சியங்களாக எரிக் சொல்ஹெய்ம், அப்போது நோர்வேயின் வெளியுறவு அமைச்சராக இருந்த விடார் ஹெல்கசன், உலக வங்கி, ஐக்கியநாடுகள் அவை என இந்தச் சாட்சியப் பட்டியில் நீண்டு கொண்டே செல்லலாம்.
கனடா கூட சாட்சியப் படுதக்ககூடிய சாத்தியம் பெரிய அளவில் உண்டு. இதற்கான காரணம் யாதெனில் இந்தப் பேச்சுவார்த்தையின் உச்ச காலத்தில் விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாகத் தடைசெய்ய வேண்டிய தேவை கனடாவிற்கு எப்படியேற்பட்டது என்பதைக் கண்டறியும் விடயங்கள் இந்த விசாரணைகளின் போது இடம்பெறலாம் என்றே நம்பப்படுகிறது.
2003ம் ஆண்டு வட-கிழக்கு மீள் கட்டுமாணத்திற்கென 4.5 பில்லியன் டொலர்கள் வழங்க ஒப்புக் கொண்டு ஜப்பானில் 51 நாடுகளும் 22 சர்வதேச அமைப்புக்களும் இணைந்து மாநாட்டை நடத்தின.
இந்த மாநாட்டில் உலக வங்கியின் சார்பில் கலந்து கொள்ளவிருந்த அதன் உப-தலைவர் தனது பதவியை மாநாட்டிற்கு முதல்நாள் இராஜினாமச் செய்திருந்தார். அதற்காக அவர் தெரிவித்த காரணம் இந்த மாநாட்டில் புலிகள் பங்குபற்றாததால் அவர்கள் அழிக்கப்பட போகிறார்கள் என்பதேயாகும்.