40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பயணித்து வந்த நடிகர் நடிகர் மதுரை மோகன் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..

107

 

இந்த ஆண்டு நம் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பல கலைஞர்களை நாம் இழந்துள்ளோம். மனோபாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர்.எஸ். சிவாஜி, ஜூனியர் பாலையா என பல திறமையான பிரபலங்கள் இந்த ஆண்டு நம்மைவிட்டு பிரிந்துள்ளனர்.

மதுரை மோகன் மரணம்
இவர்களின் மரணம் கொடுத்த துயரமே நீங்காத நிலையில், தற்போது மீண்டும் ஒரு நல்ல நடிகரை இழந்துள்ளோம். 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பயணித்து வரும் நடிகர் மதுரை மோகன் இன்று காலை மரணமடைந்துள்ளார்.

40 ஆண்டுகளாக இவர் சினிமாவில் இருந்து ராம் குமார் இயக்கத்தில் வெளிவந்த முண்டாசுப்பட்டி தான் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

ரசிகர்களும், நட்சத்திரங்களும் இரங்கல்
இவருடைய மரணம் திரையுலகில் உள்ள பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

SHARE