பலாங்கொடயில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்த முயற்சித்த வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக மதுபானம் அருந்திவிட்டு பாடசாலை மாணவர்களை அழைத்து சென்ற தனியார் பேருந்து சாரதி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று மாலை இந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலை பேருந்து பின்னவல, உடகமவில் இருந்து நெல்லிவெல ஊடாக அலுத்நுவர பிரதேசத்திற்கு சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது செய்யப்பட்ட போது, பேருந்தில் 40 மாணவர்கள் பயணித்துள்ளனர்.
சந்தேக நபரான சாரதி பலாங்கொட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரது சாரதி அனுமதி பத்திரம் 10 மாதங்களுக்கு இரத்து செய்யப்பட்டதுடன், 7500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.