40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்.. ஈஸியா எடையை குறைக்கலாம்

215

உடல் பருமனை தொடர்ந்து பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும்.

அதிலும் 40 வயது கடந்தவர்களுக்கு உடல் உழைப்பு, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணத்தினால் உடல் எடை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.

உடல் எடையை குறைக்க பின்பற்ற வேண்டியவை?
  • உணவுகளில் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்வதுடன், கொழுப்பு நிறைந்த மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • காலை உணவை தவிர்க்கக் கூடாது. ஏனெனில் அதனால் மதியம் அதிகப்படியான உணவு சாப்பிடத் தோன்றுவதுடன், ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டின் அளவு மற்றும் செரிமானம் அடையும் நேரம் வேறுபடும்.
  • இரவுகளில் குறைவான உணவுகளை, குறைந்த அளவிலான கலோரி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் மசாலா உள்ள பொருட்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • உணவுகளை டீப் ஃப்ரை செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வேகவைத்த உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதிக காரமான, துரித உணவுகளை சாப்பிடக் கூடாது.
  • உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இனிப்பு நிறைந்த டீ, காஃபி, கூல் டிரிங்க்ஸ் போன்ற பானங்கள் குடிப்பதை தவிர்த்து விட வேண்டும்.
  • ஒரு டம்ளர் பீர் அல்லது ஒயினில் 150 கலோரிகள் உள்ளது. அதை அதிகமாக குடித்தால், உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும், எனவே மது பழக்கத்தை விட வேண்டும்.
  • அதிக மன அழுத்தம் உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். அதனால் தியானம், யோகா , மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.
  • 40 வயதிற்குப் பின் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை தவிர்க்க வேண்டுமானால் தினமும் நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம்.
SHARE