பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஹார்மோன்களில் ஒருசில மாற்றங்கள் நிகழ்வதால், சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சியில் அதிக மாற்றம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகிறது.
எனவே இளமையில் இருந்த கூந்தலின் பளபளப்பு மற்றும் போஷாக்கை முதுமையிலும் பின்பற்றுவதற்கு இதோ சூப்பரான டிப்ஸ்,
- கூந்தலின் வளர்ச்சியை முதுமையிலும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பழைமையான சிறிய பிளாஸ்டிக் சீப்புகளைத் தவிர்த்து, நல்ல தரமான பெரிய பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்த வேண்டும்.
- தினமும் அடிக்கடி தலைக்கு குளிப்பதை தவிர்த்து, கூந்தலுக்கு பயன்படுத்தும் ட்ரை ஷாம்புகளை வாங்கி ஸ்ப்ரே செய்துக் கொள்ள வேண்டும்.
- ஷவரில் அதிக நேரம் நின்று தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் முடிகள் அதிகமாக உடைந்து உதிர்வது தடுக்கப்படுகிறது.
- கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- புரதச்சத்து நிறைந்த மீன்கள், நட்ஸ், பீன்ஸ், இறைச்சி, இரும்புச்சத்துகள் கொண்ட கீரை, பேரிச்சம்பழம், உலர் பழங்கள், மற்றும் முட்டைகள் போன்ற உணவுகளை மறக்காமல் சாப்பிட வேண்டும்.