ஊவா மாகாண அமைச்சராக செந்தில் தொண்டமான் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

264
ஊவா மாகாண அமைச்சராக செந்தில் தொண்டமான் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உட்பட புதிய அமைச்சரவை இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டது.

மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டது.

நிதி, திட்டமிடல்,சட்டம், அமைதி, கல்வி, உள்ளூராட்சி, மின்வலு எரிசக்தி, நிர்மாணம், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கூட்டுறவு அமைச்சராக செந்தில் தொண்டமான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் பாதுகாப்பு, மகளீர் விவகாரம்,சமூக நலன்புரி அமைச்சராக ஆர்.எம். குமாரசிறி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

மாகாண விளையாட்டு, இளைஞர் விவகாரம், சுற்றுலா, போக்குவரத்து, கலாசாரம், சிறு கைத்தொழில் அமைச்சராக சாலிய சுமேத பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க அறிவித்துள்ளார்.

SHARE