சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விளையாட்டு துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர யாழ்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டார். விளையாட்டுதுறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர யாழ்.ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசத்தை அவரின் இல்லத்தில் இன்று புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசத்தைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் கூட இருந்தார். –