இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
இன்று92015-11-13) தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் கள்ளப்பாடு தெற்கு கிராமத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. மக்களின் அறிவித்தலுக்கமைய வடமாகாணசபை உறுப்பினர் மதிப்பிற்குரிய துரைராசா ரவிகரன் அவர்கள் வெள்ளத்தில் மூழ்கிய இடங்களை பார்வையிட்டார்.
அதன் பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ரவிகரன் அவர்கள் கலந்துரையாடிய பின்னர்; இதுவரை வீடுகள் கிடைக்காமல் குடிசைகள் வாழும் குடும்பங்கள் (வெள்ளத்தில் மூழ்கிய) கள்ளப்பாடு தெற்கு. முன்பள்ளிக்கூட்டத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
வெள்ளத்தினால் மூழ்கிய குடிசைகள் வீடுகள் வீதிகள் மைதானம் போன்ற இடங்களை ரவிகரன் அவர்களுக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவி செனற்செயராணி பொருளாளர் சுலோசனா ஆகியோர் காண்பித்தனர்.
இது தொடர்பில் ரவிகரன் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில்,
வீட்டுத்திட்டம் கிடைத்தவர்கள் ஓரளவு சமாளித்தாலும் வீடுகள் கிடைக்காமல் குடிசைகளில் வாழும் சில குடும்பங்கள் மிகுந்த இடர்பாடுகட்கு உள்ளாகியிருக்கிறார்கள். இது தவிர வடிகாலமைப்பு வேலைகள் செய்யப்படாமையால் நீர் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிந்தது.