தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோர் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

353

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் இருவரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப் பட்ட போது எதிர்வரும் விளக்கமறியல் எதிர்வரும் 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

praddp_master_002

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோர் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக விசாரனைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கடந்த மாதம் 7ம் திகதி கைது செய்யப்பட்டு 04.11.2014 அன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது இருவரும் மஜிஸ்திரேட் முன்னிலையில் குற்ற ஓப்புதல் வாக்கு மூலமொன்றை அளித்தனர்.

இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று  மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

நீதிபதி என். எம். எம். அப்துல்லாஹ் எதிர்வரும் 2 ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இதேவேளை ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா வழங்கினார்.

இதே வேளை குறித்த படுகொலை தொடர்பாக கடந்த 11ம் திகதி குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

SHARE