![]() இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் அரசியலுக்கு அப்பாற்பட்டு நிச்சயம் நடத்த வேண்டும் என்று அப்ரிடி விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அது எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் நடத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானிற்கு வந்து இந்தியா விளையாடினால் தான் மகிழ்ச்சி அடைவேன், மேலும் இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தானிற்கு வந்து விளையாடினால் அது மிகப்பெரிய சந்தோஷமான விஷயமாக இருக்கும். பாகிஸ்தானை ஆதரியுங்கள் இங்கு விளையாடுங்கள் என்று கூறியுள்ளார். |