44 பந்தில் 106 ரன்கள், 8 சிக்ஸர் விளாசல்! எதிரணிக்கு மரண பயத்தை காட்டிய வீரர்

140

 

கரீபியன் லீக் தொடரில் ஷாய் ஹோப் அதிரடியாக 44 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.

சிக்ஸர் மழை பொழிந்த ஷாய் ஹோப்
கயானாவில் நடந்த போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய கயானா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியின் மேற்கிந்திய வீரர் ஷாய் ஹோப் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.

மொத்தம் 44 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் விளாசினார்.

 

SHARE