ஐ.பி.எல் தொடரில் இணையும் இரண்டு புதிய அணிகள்

336
ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் யல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து அடுத்த இரு ஆண்டுக்கு மட்டும் இரண்டு புதிய அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

புதிய அணிகளை வாங்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து டெண்டர் விண்ணப்பங்களையும் பெற்று இருக்கின்றன.

இந்த நிலையில் புதிய இரு அணிகள் எவை என்பது நாளை அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது. இதன் முடிவில், விதிமுறைக்கு உட்பட்டு யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்டு டெண்டரில் தொகை குறிப்பிட்டு இருக்கிறார்களா? அவர்களுக்கு அணியின் உரிமம் வழங்கப்படும்.

SHARE