45 வயதிலும் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் மஞ்சு வாரியர் மொத்த சொத்து மதிப்பு

24

 

நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். அவரை மலையாள லேடி சூப்பர்ஸ்டார் என்றும் சொல்லலாம்.

அவர் 90 களில் ஏராளமான மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து புகழப்பெற்றார். அதன் பின் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். அதன் பின் திலீப் நடிகை காவ்யா மாதவனை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார்.

மஞ்சு வாரியார் விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிமாறனின் அசுரன், அஜித்தின் துணிவு உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் மஞ்சு வாரியர் நடித்து இருக்கிறார்.

லைப் ஸ்டைல்
மஞ்சு வாரியார் தனியாக தான் வசித்து வருகிறார். அவரது சொந்த மகளும் விவாகரத்துக்கு பிறகு அப்பா திலீப் உடன் சென்றுவிட்டார்.

மஞ்சு வாரியர் துணிவு படத்தில் நடிக்கும் போது அஜித் உடன் பைக் ரைடு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் அஜித் உடன் லடாக் உள்ளிட்ட பல இடங்களுக்கு பைக் ரைடு சென்று இருக்கிறார்.

மஞ்சு வாரியர் பைக் ரைடு மீது அதிக ஆர்வம் கொண்டு சொந்தமாக ஒரு காஸ்ட்டிலி பைக் வாங்கி இருக்கிறார். அதை கொண்டு அவர் சோலோவாக தற்போது பல இடங்களுக்கு பைக் ரைடு சென்று வருகிறார்.

மஞ்சு வாரியர் சொத்து மதிப்பு
நடிகை மஞ்சு வாரியருக்கு கேரளாவில் பல இடஙக்ளில் வீடுகள் இருக்கிறது. மேலும் மூன்று சொகுசு கார்களையும் அவர் பல கொடிகள் கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார்.

மஞ்சு வாரியரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 142 கோடி முதல் 150 கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

SHARE