45 வயதில் பிக் பாஷ் அணிக்காக ஒப்பந்தம்! புதிய சாதனை படைத்த பிராட் ஹாக்

245

625.500.560.350.160.300.053.800.748.160.70 (4)

பிக் பாஷ் லீக் தொடரில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக் 45 வயதில் ரெனேகட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு சாதனைப் படைத்துள்ளார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் தற்போது இந்தியாவில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அதிக வயதுடைய மூத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி ஸ்கார்செர்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹாக், பிக் பாஷ் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சிட்னி ஸ்கார்செர்ஸ் அணியில் இருந்து விலகிய 45 வயதான பிராட் ஹாக்கை மெல்மோர்ன் ரெனேகட்ஸ் அணி 2016-17 சீசனுக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

SHARE