450 சீனப் புலனாய்வாளர்கள் இலங்கையில் – மஹிந்தவின் தேர்தல் ஆதரவிற்காகவா எனச் சந்தேகம்

367

 

கடந்த பல வருடங்களாக சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் கொடுத்துவருகின்றன. இதிலும் குறிப்பாக நிறுவனங்கள் என்ற போர்வையில் மேற்குலக நாடுகள் தமது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன அதேநேரம் சீனாவா? இந்தியாவா? அமெரிக்காவா? இலங்கையில் நிரந்தரமாக காலூன்றுவது என்ற போட்டி நிலவுகின்ற இத்தருணத்தில், மஹிந்த ராஜபக்ஷவை அதிகமான பணத்தினை வழங்கி சீன அரசு விலைக்கு வாங்கியுள்ள அதேநேரம் தனது புலனாய்வு நடவடிக்கைகளை இலங்கையில் முடக்கிவிட்டுள்ளது.

புடவை வியாபாரிகளாகவும், தொழிலதிபர்களாகவும் இந்தியாவின் ரோ இலங்கையில் காலடி எடுத்துவைத்திருக்கின்றது. அமெரிக்கரசானது வெள்ளைக்கொடி விவகாரத்தினை கையில் வைத்துக்கொண்டு மஹிந்த அரசினை பயமுறுத்துகின்றது. இவ்வாறு மாறி மாறி மேற்கத்தேய நாடுகள் இலங்கை அரசின் மீது தமது புலனாய்வு நடவடிக்கைளை மேற்கொள்கின்றன. இலங்கையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கின்றோம் என்ற போர்வையில் சீன உளவாளிகள் இலங்கையில் உள்நுழைந்திருப்பதென்பது அவர்களது அதிகாரத்தினை வெளிப்படுத்தியதாகவே அமைகின்றது.
சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன. இந்தியா இதற்கு கடுங்கண்டனம் தெரிவித்திருந்தது. சர்வதேச ரீதியாக மஹிந்தவைக் காப்பாற்ற சீனாவே முன்வந்திருக்கின்றது. அதன் காரணமாகவோ என்னவோ சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் தலைதூக்கியுள்ளது. இந்நிலைமை மாற்றம் பெறாவிட்டால் இலங்கையரசு பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். சீனப் புலனாய்வாளர்கள், சீன அரசு மஹிந்த ராஜபக்ஷவின் அரசினைக் காப்பாற்றும் என நினைத்தாலும் சிங்கள இனவாதக் கட்சிகள் ஒரு தீர்வினைக் கண்டுள்ளன. இம்முறை வெற்றி மைத்திரி பக்கமே செல்லக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. சீனப் புலனாய்வாளர்கள் தொடர்பிலும் அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்திருக்கின்றனர். இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணம் தொடர்கின்றது. புலனாய்வாளர்களுடைய கையில் எந்தநாடு இருக்கின்றதோ அந்த நாட்டை எவராலும் அசைக்கமுடியாது என்பதுதான் வரலாறு.

SHARE