
குடும்பத்தினருடன் ரோஜா
கடந்த 1992-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ‘செம்பருத்தி’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார் ரோஜா.
தற்போது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக இருக்கும் ரோஜா தனது கணவர், குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
2002-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி – ரோஜா திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடிப்பைத் தாண்டி அரசியலில் நுழைந்த ரோஜா, 2014-ம் ஆண்டு ஆந்திராவின் நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.