48 வருட உலகக் கிண்ண வரலாற்றில் முதல் சாதனை

133

நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்பமே அதிரடியாக தொடங்கினார் வார்னர்.

ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து அசத்திய வார்னரின் வேகம் சதத்தில்தான் முடிந்தது. வார்னர் 104 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஸ்மித், லபுஷேன் 71, 62 ஓட்டங்கள் முறையே எடுத்தனர்.

இந்நிலையில் 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார் மேக்ஸ்வெல். 44 பந்துகளில் 106 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் மேக்ஸ்வெல். இதில் 9 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற பேட்டர்களான மிட்செல் மார்ஷ் – 9, கிரீன் – 8, கம்மின்ஸ் – 12, இங்கிலிஸ் – 14 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 399/8 ஓட்டங்கள் எடுத்தது. நெதர்லாந்தின் வான் பீக் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

400 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 21 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதிகபட்சமாக விகரம்ஜித் சிங் 25 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 48 வருட உலகக் கிண்ண வரலாற்றில் இவ்வளவு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

SHARE