49 வது ஆண்டு பொன்னர் சங்கம் கூத்து

437

பொன்னர் சங்கர் கூத்தானது பேச்சு வழக்கில் மருவி பொன்னர் சங்கம் என பெயர் வந்தது. பொன்னர், சங்கர் எனும் இரண்டு சகோதரர்களும் தனது தங்கையின் ஆசையை நிறைவேற்ற ஏழு கடல் தாண்டி சென்று தங்கை கேட்ட கிளியை கொண்டு வந்து தன் தங்கையிடம் கெடுத்தனர். அந்த கிளியைத்தேடி செல்லும் வழியில் சந்தித்த இன்னல்களையும் பேராட்டங்களையும் அன்னன் தங்கை உறவின் ஆலத்தையும் 5 அங்கங்களான பிறப்பு வளர்ப்பு, கிளி பிடித்தல், பன்றி குத்துதல், சத்தியம் செய்தல், படுகளம் ஆகியவற்றை சித்தரிக்கும் கதையே பொன்னர் சங்கர் கூத்தாகும்.

இந்தியாவிலிருந்து எம் முன்னோர் வழி வந்த இக்கூத்து தற்போது மலையக சமுகத்தினரின் வழிபாடுகளும் கலைகளும் கூத்துகளும் நாளைய சந்ததியினருக்கு ஆவணப்படுத்தப்படுவதும் அரங்கேற்றபடுவதும் இன்றியமையாதது. காமன் கூத்து, பொன்னர் சங்கர் அருச்சுனன் தவம் போன்ற கூத்துக்கள் தோட்டப்புறங்களில் அறிதாகவே அறங்கேற்றபடுகின்றது. எனினும் தலவாகலை, லிந்நுலை மற்றும் ஒஸ்போன், காசல்ரி, ஓல்டன், சாமிமலை பகுதிகளில் இக் கூத்துக்கள் இன்றும் நடைபெருகின்றது. அந்தவகையில் லிந்துலை நோனா தோட்டத்தில் கடந்த மாதம் 26.27.28 திகதிகளில் 5 வது அங்கமான படுகளம் கூத்து நோனா தோட்ட காளி அம்மன் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.

49வது ஆண்டாகவும் தோட்ட இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு கனேசன், தம்பிராஜ் தவமனி, இருதயராஜ் ஆகிய முன்று ஆசான்களினால் பொன்னர் – சங்கர் கூத்தின் படுகளம் சிறப்பாக நடைபெற்றது. நோட்டன் பிரிட்ஜ் நிருபர் இராமசந்திரன் 

2ea46307-ad69-4a35-b8a7-f0a355676afb 7e27b792-da50-4695-8282-b17bfaf6f79f 16e81aef-49a6-4717-91dc-2e9f278dddac 51e06110-7359-4ca1-b96a-5dd815d22386 ad58bbd5-59a3-41da-b981-7d553a811e91 b8568a67-b65f-4cb0-a2b6-662ddaa9ee21 c3d9867f-5839-4aed-bfd8-db15e5603286 c068e1d8-3a19-4e60-8a1d-576c60c9d2bf e8dc0c7b-0e52-4550-b837-01bcf2418709

SHARE