492 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட அயர்லாந்து அணி

147
அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டதாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்ற முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் 492 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணி சார்ப்பில் Curtis Campher 111 ஓட்டங்களையும் Paul Stirling 103 ஓட்டங்களையும் அணித்தலைவர் Andrew Balbirnie 95 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் பிரபாத் 5 விக்கெட்களையும் விஸ்வ பெர்ணான்டோ மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

SHARE