‘5ஜி’ ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் முதலிடத்தை பிடித்துள்ளது

314

 

இந்தியாவில் ‘5ஜி’ ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் முதலிடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் தான் விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது அந்த நிறுவனம். இது தொடர்பாக சைபர் மீடியா ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையில், ஜூன் காலாண்டில் முதலிடத்தை பிடித்துள்ளது, சீன நிறுவனமான ‘ஷாவ்மி’ இதன் விற்பனையில் 22 சதவீத சரிவு ஏற்பட்டுள்ள போதிலும்; 20 சதவீத சந்தை பங்களிப்புடன், முதல் இடத்தில் உள்ளது.

Samsung

இரண்டாவது இடத்தில் 18 சதவீத பங்களிப்புடன், கொரிய நிறுவனமான சாம்சங் உள்ளது. இருப்பினும், 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடத்தை இந்நிறுவனம் பிடித்துள்ளது.

மேலும், 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை விலையிலான ‘சூப்பர் பிரீமியம்’ பிரிவில் ‘ஆப்பிள்’ நிறுவனம் 78 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், இதன் விற்பனை வளர்ச்சிக்கு ‘ஐபோன் 12’ மற்றும் ‘ஐபோன் 13’ வரிசை போன்கள் விற்பனை பெரிய உதவி செய்துள்ளது

SHARE