ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்களுக்கு அவ ர்கள் கொமர்ஷல் வங்கியின் சிறுவர் சேமிப்புக் கணக்குத் திட்டமான அருணலு கணக்கை வைத்திருந்தால் மேலும் பல மில்லியன் ரூபாக்களை வெகுமதியாக வெல்லும் வாய்ப்பு கொமர்ஷல் வங்கியின் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் அல்லது மாவட்ட மட்டத்தில் அல்லது தேசிய மட்டத்தில் முதலாம் இரண்டாம் அல்லது மூன்றாம் இடங்களைப் பெறுகின்றவர்களுக்கு மீண்டும் ஒரு தடவை வெகுமதிகளை வழங்கவுள்ளதாக நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கி அறிவித்துள்ளது.
அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் ஊடாக அமுல் செய்யப்படும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாகவே இந்த வெகுமதி வழங்கப்படவுள்ளது.
இளம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கல்வியின் பெறுமதியை அவர்கள் உணரச் செய்யும் வகையிலும் கொமர்ஷல் வங்கியின் அருணலு சேமிப்புக் கணக்கு திட்டத்தின் ஊடாக 2016 புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு அவர்கள் அருணலு கணக்கொன்றை வைத்திருக்கும் பட்சத்தில் சுமார் 382500 ரூபாவை வழங்கவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இது தொடர்பான வைபவம் இடம்பெறவுள்ளது.
இதனடிப்படையில் முதலாம் இடத்தைப் பெறும் மாணவன் அல்லது மாணவி மாதாந் தம் 2000 ரூபா தவணைக் கொடுப்பனவின் அடிப்படையில் தனது 18வது வயதில் சுமார் 170000 ரூபாவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இரண்டாம் இடத்தைப் பெறுபவர் ரூபா1500 மாதாந்த அடிப்படையில் 127500 ரூபாவையும், மூன்றாம் இடத்தைப் பெறுபவர் மாதாந்தம் 1000 ரூபா அடிப்படையில் 85000 ரூபாவையும் பெற்றுக் கொள்ள முடியும் என வங்கி அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக அருணலு கணக்கு வைத்திருப்பவர் தனது மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தால் 50000 ரூபா வரையில் பெற்றுக் கொள்ள முடியும்.
அதேபோல் அருணலு கணக்கு வைத்திருப்பவர்கள் தமது பாடசாலை மட்டத்தில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்திருந்தால் முறையே 10000, 7500 மற்றும் 5000 ரூபா என வெகுமதிகளை பெறலாம்.
2012 முதல் 2015 வரையான நான்கு வருட காலத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் மத்தியில் கொமர்ஷல் வங்கி மொத்தமாக 21.2 மில்லியன் ரூபாவை அருணலு கணக்குத் திட்டத்தின் மூலம் பகிர்ந்தளித்துள்ளது.