இடம்பெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள், இம்மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்படவுள்ளதாக, இலங்கைப் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்றது.
குறித்த பரீட்சையில், மூன்று இலட்சத்து ஐம்பத்தையாயிரத்து முன்னூற்று இருபத்தாறு மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
நாடு தழுவிய ரீதியில், மூவாயிரத்து ஐம்பது பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.