5 நிமிடத்தில் சரும பிரச்சனைக்கு தீர்வளிக்கும் வாழைப்பழம்

171

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமப் பிரச்சனைகளுக்க்கு கூட நல்ல தீர்வாக உள்ளது.

எனவே சருமப் பிரச்சனைகளை தீர்க்க வாழைப்பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

சரும வறட்சி நீங்க

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கும்.

பொலிவான சருமம் பெற

மசித்த வாழைப்பழத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

கரும்புள்ளிகள் நீங்க

மசித்த வாழைப்பழத்துடன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சொரசொரப்பான சருமம் நீங்க

வாழைப்பழத்தை மசித்து, அதில் சர்க்கரை சேர்த்து, அதை கொண்டு முகத்தை வட்ட வடிவில் ஸ்கரப் செய்து, முகத்தை கழுவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சிடும்.

முதுமை தோற்றத்தைத் தடுக்க

வாழைப்பழம் மற்றும் அவகேடோ பழத்தை மசித்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.

வீக்கமடைந்த கண்களுக்கு

வாழைப்பழத்தை மசித்து, கண்களின் மேல் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் குறைந்து பொலிவாக இருக்கும்.

SHARE