5 மாத கர்ப்பிணி பெண்ணை சுட்டுக் கொன்றது யார்? பொலிசார் தீவிர விசாரணை

314

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

கனடா நாட்டில் 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரொறன்றோ நகரை சேர்ந்த Candice “Rochelle” Bobb(35) என்ற கர்ப்பிணி பெண் அவரது 3 நண்பர்களுடன் விளையாட்டு போட்டி ஒன்றினை பார்த்துவிட்டு கடந்த ஞாயிறு அன்று வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இரவு 11 மணியளவில் Rexdale என்ற பகுதியில் கார் சென்றபோது, திடீரென கார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

காரை நிறுத்திய நண்பர்கள் மூவரும் குண்டு காயங்களுடன் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

ஆனால், படுகாயமுற்ற அந்த கர்ப்பிணி பெண் காரில் உயிருக்கு போராடியுள்ளார்.தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுனர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

5 மாத கர்ப்பிணியான அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

ஆனால், இந்நிகழ்வு நடைபெற்று முடிந்தவுடன், சிகிச்சை பலனின்றி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தற்போது குழந்தை ஆரோக்கியமாக மருத்துவமனையில் 24 மணி நேரக்கண்காணிப்பில் உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பொலிசார், கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது முன் விரோதம் காரணமாக செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இக்கொலை குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE