மும்பை இந்தியன்ஸ் அணி 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது.
17வந்து ஐபிஎல் சீசன் தொடர் அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடங்குகிறது. இதற்கான மினி ஏலம் துபாயில் 19ஆம் திகதி தொடங்குகிறது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி Trade முறையில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வாங்கியதுடன், அணியின் புதிய கேப்டனாக அவரையே நியமித்துள்ளது.
இதனால் 5 முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எனினும் மும்பை இந்தியன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ரோகித் சர்மாவுக்கு நன்றி தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுள்ளது.