நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
கடந்த 15, வருடங்களாக புணரமைக்கப்படாமல் உடைந்து விழும் நிலையிலுள்ள ஆடி பாலத்தை புணரமைத்து தருமாறு லக்ஷபான ஹிட்டிகேகம பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மஸ்கெலியா ஒயா விலிருந்து களனி கங்கைக்கு செல்லும் மஸ்கெலிய ஓயாவை ஊடறுத்து செல்லும் 250 அடி நீளமுள்ள ஆடி பாலமே இவ்வாறு உடைந்து காணப்படுகின்றது.
பாரத்தை தாங்கி நிற்கும் கம்பிகள், நடைபாதை பலகைகள் உடைந்தும் காணப்படுவதுடன் ஆபத்தான நிலையிலுள்ள மேற்படி பாலத்தில் பாடசாலை மாணவர்களும் பயணிகளும் வீழ்ந்து காயமுற்ற சம்பவங்களும் இடம்பெற்றுறுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
1955 ஆண்டு அமைக்கப்பட்ட மேற்படி பாலைத்தை நான்கு கிராம மக்கள் குருக்கு வழியாக பயன்படுத்துவதுடன் உடைந்து விழும் நிலையிலுள்ள பாலத்தை பல அரசியல்வாதிகள் வந்து பார்வையிட்டபோதும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஹிட்டிகேகம, மெரதொட்டியாவத்த, கெச ல்ஹராவ, மகுருமாதெனிய கிராம மக்கள் பெரிதும் பயன்படுத்தும் இப்பாலத்தை புணரமைத்து தருமாறு பிரதேச வாழ் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.








