50 வீதமான மாணவர்கள் கணிதம், ஆங்கிலத்தில் சித்தியடையவில்லை: பரீட்சைகள் திணைக்களம்

366
பாடசாலைகள் ஊடாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 50 வீதமானோர் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் சித்தியடையவில்லை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 602 பேர் கணிதப் பாடத்தில் சித்தியடைந்துள்ளதுடன், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 198 பேர் அந்த பாடத்தில் சித்தியடையவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

அத்துடன் ஆங்கிலத்தில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சித்தியடையவில்லை.

ஆங்கிலப் பாடத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 701 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 943 மாணவர்கள் சித்தியடையவில்லை.

பாடசாலைகள் ஊடாக முதல் முறையாக சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 2 லட்சத்து 57 ஆயிரத்து 322 மாணவர்களில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 612 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

SHARE