50 ஆண்டுகளில் சிறந்த இன்னிங்ஸ் யாருடையது? முதல் இடம் பிடித்த லட்சுமண் 

363
50 ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தியவர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பை இ.எஸ்.பி.என் இணைய இதழ் நடத்தியுள்ளது.கடந்த 2001-ம் ஆண்டில் ஈடன் கார்டன் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் லட்சுமண் அடுத்த 281 ஓட்டங்கள் தான் கடந்த 50 ஆண்டுகளில் மிகச் சிறந்த இன்னிங்சாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டியில், லட்சுமண் (281) டிராவிட்டுடன்(180) இணைந்து 376 ஓட்டங்கள் எடுக்க, இந்தி அணி 657/7 ஓட்டங்கள் குவித்தது, இந்த போட்டியின் முடிவில் அவுஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 212 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.

இந்த 2வது இன்னிங்சில் லட்சுமண் 3வது வீரராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய அளவில் பாராட்டை பெற்ற லட்சுமணனின் இந்த இன்னிங்ஸ்தான், தற்போது சிறந்த இன்னிங்சாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE