50 பணயக்கைதிகள் விடுதலைக்கு பதில் 150 பேர் விடுவிப்பு!

123

 

50 பணயக்கைதிகள் விடுதலைக்கு பதில் , இஸ்ரேலிய சிறையில் உள்ள 150 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இஸ்ரேல் 150 பாலஸ்தீன பெண்கள் சிறுவர்களை விடுதலை செய்யும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பாலஸ்தீன உடன்படிக்கை
ஹமாஸ் பாலஸ்தீன உடன்படிக்கையின் கீழ் மனிதாபிமான உதவிகள் மருந்துகள் எரிபொருட்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட டிரக்குகள் காசாவிற்குள் நுழையவுள்ளன என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அதேவேளை யுத்தஇடைநிறுத்த காலப்பகுதியில் காசாவில் எந்த தாக்குதலையும் மேற்கொள்ளப்போவதில்லை என்றும் எவரையும் கைதுசெய்யப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது

SHARE