50 வினாடி விளம்பரத்தில் நடிக்க நடிகை நயன்தாரா இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா?- மிரண்டு போன ரசிகர்கள்

109

 

நடிகை நயன்தாராவை தெரியாத இந்திய சினிமா ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம். கேரளாவில் இருந்து வந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார்.

அண்மையில் ஹிந்தி சினிமாவில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றிக்கண்டுள்ளார்.இப்படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்துள்ளது.

விளம்பரத்திற்கான சம்பளம்
திரைப்படங்களை தாண்டி நடிகை நயன்தாரா அதிகம் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். 50 வினாடிகள் ஓடும் விளம்பரத்தில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

தனியாக சொந்த தொழில்கள் மூலமாகவும் நயன்தாரா கோடி கோடியாக சம்பாதித்து வருகிறாராம். சென்னையில் சொகுசு வீடு, இதில் பிரத்யேகமான திரையரங்கு, நீச்சல் குளம், ஜிம் போன்ற வசதிகள் உள்ளனவாம்.

SHARE