கேம்ப்நியூ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்ஸிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.29வது நிமிடத்தில் ரியல் பெடிஸ் அணி சேம்சைடு கோல் அடித்தது. 33-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல்![]() பார்ஸிலோனா அணிக்காக மெஸ்ஸி அடித்த 425 -வது கோல் இதுவாகும். சவுரஸ் 46 மற்றும் 83- வது நிமிடத்தில் கோல்கள் அடித்தார். பார்ஸிலோனா அணிக்காக தனது 500வது போட்டியில் லயோனல் மெஸ்ஸி களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ஓய்வு பெற்ற சேவி ஹெர்னான்டஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் 767 போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது ஸ்பானீஷ் லீக்கில் பார்ஸிலோனா 38 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
|