51 வயது நடிகருக்கு வந்த காதல்… காதலியின் வயது என்ன தெரியுமா?

184

 

மிலிந்த் சோமன், தமிழில் வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பையா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்தி நடிகரான மிலிந்த் சோமன்(51) பிரெஞ்ச் படம் ஒன்றில் நடித்த போது, அப்படத்தில் நடித்த மிலன் ஜம்போனாயை காதலித்தார்.

அதன் பின் 2005-ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்த அவர், 2009-ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் மிலிந்த் சோமன், விமானப் பணிப்பெண்ணான அங்கிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது. 51-வயதை எட்டியுள்ள மிலிந்த் சோமனை விட, அங்கிதா பாதி வயது குறைந்தவர் என்று கூறப்படுகிறது.

 

SHARE