ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக விழையாட்டின் மூலம் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் தேசிய ஒற்றுமையையும் அபிவிருத்தியையும் கட்டி எழுப்புவோம்

359

 

 

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக விழையாட்டின் மூலம் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் தேசிய ஒற்றுமையையும் அபிவிருத்தியையும் கட்டி எழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் இன்று வவுனியாவில் சிவில் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபவனியும் உடற்பயிற்சியும் நடைபெற்றது.

3d8da1b0-534b-4def-80b1-3d61dc927506 249e9e3b-dc0b-44d8-819e-6a721392177a 754dcf49-ba5f-4cb1-b281-d8dc04410c00 85224d5d-a4b5-4ca3-8e71-32bea7f5dcfc b16d4af0-74c9-49ff-bd95-0aed3ed816a9
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலையத்தின் முன் மதகுருமாரின் ஆசியுடன் ஆரம்பித்த நடைபவனி வவுனியா பேருந்து நிலையத்தினூடாக வவுனியா நகரசபை மைதானத்தை வந்தடைந்தது.
அங்கு அனைவருக்கும் உடற்பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் வவுனியா ,மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட உதவிபொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.மகிந்த ஏக்கநாயக்கா, வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க, வவுனியா உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பண்டார, ஓய்வுபெற்ற வடமாகாண விழையாட்டுத்துறை பணிப்பாளர் அண்ணாதுரை,வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சன் அபயரெட்ன, சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

SHARE