போகோஹராம் தீவிரவாதிகளுடன் சண்டையிட மறுத்த 54 ராணுவ வீரர்களையும், சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நைஜீரியாவில் தனி நாடு கோரி போராடி வரும் போகோஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து பல அட்டூழியங்களை நடத்தி வருகிறது.
அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 300 பள்ளி சிறுமிகளை கடத்தி சென்று, தங்களது ரகசிய முகாம்களில் அடைத்து வைத்து துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் சமீபகாலமாக பெண்களை தற்கொலை படைகளாக பயன்படுத்தி பல கிராமங்களில் மக்களை கொலை செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் போகோஹராம் நடத்தியாதாகக் கூறப்படும் தாக்குதல்களில் 2000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராணுவ வீரர்கள் போகோஹராம் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட தங்களுக்குப் போதுமான ஆயுதங்களோ, வெடி மருந்துகளோ தரப்படவில்லையென புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே இவ்வாறு புகார் அளித்த 54 ராணுவ வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆஜரான 54 ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். |