கொரியாவின் உல்ஷான் சாஜே பிக்கு வைத்தியசாலை முறைமையின் தலைவர் நோன்க் ஹென்ஜ் தேரரின் தலைமையிலான கொரியா பௌத்த தூதுக் குழுவினர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் சந்தித்தனர்.
கொரியாவின் ஸ்ரீலங்காராமயவின் தலைமை தேரர் சங்கைக்குரிய கடுவக விஜிதவங்ஸ தேரர், பிடிகல சுவ்நெதர தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் மற்றும் பிரதியமைச்சர் துஷ்மன்த மித்ரபால ஆகியோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கையிலுள்ள பௌத்த பிக்குகளுக்கு வைத்தியசாலை ஒன்றை அமைப்பது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. 34 அறைகளுடன் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை அமைத்துக் கொடுக்க இவர்கள் உறுதியளித்துள்ளனர்.