படகுதுறை அருகே கார் மூழ்கி விபத்து: சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்ததாக அச்சம்!

305
அயர்லாந்தில் படகு துறை அருகே கார் ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.அயர்லாந்தின் டொநிகல் மாகாணத்தில் அமைந்துள்ள படகு துறையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Buncrana நகரில் அமைந்துள்ள இந்த படகு துறையில் திடீரென்று கார் கடலுக்குள் இறங்கியதாகவும், தொடர்ந்து நீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட அந்த வாகனத்தில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 நபர்கள் இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

விபத்து நேரிட்ட பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். சம்பவத்தின் போது எச்சரிக்கை மணி ஒலித்துள்ளதாக என்பது குறித்து தெரியவில்லை என தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள்,

ஆனால் விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு குழுவினரும் அவசர உதவிக்குழுக்களும் உடனடியாக வந்து சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

படகுதுறையில் ஏற்பட்டது தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 4 உடல்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

SHARE