நொறுங்கிய கைக்கடிகாரம் 55,000 பவுண்டு விலைபோனது: வியப்பில் ஆழ்ந்த உரிமையாளர்!

282
பிரித்தானியாவில் ஏலத்தில் விடப்பட்ட நொறுங்கிய கைக்கடிகாரம் ஒன்று 55,000 பவுண்டு விலை போனதில் அதன் உரிமையாளருக்கு வியப்பை அளித்துள்ளது.பிரித்தானியாவின் ஷெஷைர் நகரில் குடியிருந்து வரும் நபர் ஒருவர் தமது தந்தையின் பழைய வீடு ஒன்றை சுத்தம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த அலமாரை ஒன்றில் இருந்து நொறுங்கிய நிலையில் காணப்பட்ட ஒரு கைக்கடிகாரம் அவருக்கு கிட்டியுள்ளது.

அந்த கடிகாரத்தை அவர் கிடைக்கும் விலையில் விற்கும் பொருட்டு ஏலத்தில் பொருட்களை விற்கும் நிறுவனத்தில் அளித்துள்ளார்.

அவர்களும் அந்த கடிகாரத்தை சுத்தம் செய்து ஏலத்தில் விட்டுள்ளனர். இந்நிலையில் அந்த கடிகாரத்தை Niall williams என்பவர் 55,000 பவுண்டுகளுக்கு ஏலம் எடுத்துள்ளார்.

500 பவுண்டு வரை விலை போகலாம் என கருதி இருந்த அந்த கடிகாரத்தின் உரிமையாளருக்கு இந்த சம்பவம் பேரதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட அந்த கைக்கடிகாரம் 1940 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது எனவும் இத்தாலி நாட்டின் கடற்படையினருக்கு யுத்தகாலத்தில் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் பிரித்தானிய படையினர் இந்த கடிகாரத்தை நினைவுப் பரிசாக இத்தாலியர்களிடம் இருந்து பெற்றிருக்கலாம் எனவும்,

தற்போது இந்த கடிகாரத்தினை ஏலத்தில் விட்டவரின் தந்தை 10 பவுண்டுகளுக்கும் குறைவான விலையில் இந்த கடிகாரத்தை எவரிடம் இருந்தேனும் வாங்கியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர் 10 பவுண்டுக்கும் குறைவான விலையில் வாங்கப்பட்ட கடிகாரம் தற்போது 55,000 பவுண்டு விலை போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE