ஜனாதிபதி தலைமையில் நோன்மதி தின புனித யாத்திரை

251

கினிகத்தேனை அம்பகமுவ ஸ்ரீ விஜயபா பிரிவென் விகாரையில் மெதின் முழு நோன்மதி தினத்தை முன்னிட்டு புனித ஸ்தல யாத்திரை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏட்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த யாத்திரை இன்று காலை 9 மணி முதல் 10.30 வரையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன் மற்றும் பல உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE