இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்றம் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
மீள் குடியேற்றத்திற்காக மேலும் 250 ஏக்கர் காணி பெற்றுக்கொள்ளப்பட இருப்பதாகவும், தற்சமயம் 11 ஆயிரம் பேர் மாத்திரமே தங்களுடைய பிரதேசத்தில் குடியமர்த்தப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த காணி கிடைத்தவுடன் அவர்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஏற்கனவே குடியமர்த்தப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை துரிதகதியில் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா இதன்போது தெரிவித்தார்.