5G இணைய சேவையை வழங்குவதற்காக கூகுள் தீட்டிய அதிரடித் திட்டம்

335
தற்போது காணப்படும் 4G இணைய வலையமைப்பினை விடவும் 40 மடங்கு வேகம் கூடியதே 5G இணைய வலையமைப்பு ஆகும்.இதற்கான முதற்கட்ட சோதனைகள் வெற்றிபெற்றுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் 5G வலையமைப்பு சேவையினை வழங்க புதிய திட்டம் ஒன்றினை தீட்டியுள்ளது.

அதாவது சூரிய சக்தியில் இயங்கக்கூடிய ட்ரோன் வகை சிறிய விமானங்களைப் பயன்படுத்தி இவ் இணைய சேவையினை வழங்க தீர்மானித்துள்ளது.

செக்கனுக்கு ஜிகாபிட்ஸ் வேகத்தில் தரவுகளை பரிமாற்றும் இச் சேவையினை முதன் முறையாக மெக்ஸிக்கோவில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

தொலைக்காட்சி அலைவரிசைகளையும் இணையத்தின் ஊடாக எவ்வித தடங்கலும் இன்றி பார்த்து மகிழும் வசதியை தரும் இந்த 5G சேவையினை வழங்குவதற்கு Federal Communications Commission (FCC) அமைப்பிடம் கூகுள் நிறுவனம் அனுமதியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE