6 நாட்களில் ரூ.320 கோடி

243

கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் படம் ‘கபாலி’. ரஜினி நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார்.

கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இப்படத்தின் புரோமோஷன்கள் இதுவரை எந்த தமிழ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.

‘கபாலி’ வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையில், வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்பட்டது. எனினும், அதிகாரப்பூர்வமான வசூல் நிலவரங்கள் எதுவும் படக்குழு தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்நிலையில், நேற்று சென்னையில் நடந்த ‘கபாலி’ வெற்றி விழாவில் அப்படம் உலகம் முழுவதிலும் ரூ.320 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, சென்னையில் மட்டும் 6 நாட்களில் ரூ.6 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ‘கபாலி’ வெற்றிக்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்

ஒரு வாரத்திற்குள் இதுவரை எந்தவொரு இந்திய சினிமாவும் இவ்வளவு வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனையாகவும் கருதப்படுகிறது. இந்த ‘கபாலி’ வெற்றி விழாவில், இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர்கள் ஜான் விஜய், கலையரசன், தினேஷ், மைம் கோபி, பாடகி ஸ்வேதா மோகன், பாடகர் அருண்ராஜா காமராஜ், நடிகை ரித்விகா, கலை இயக்குனர் ராமலிங்கம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், எடிட்டர் பிரவீன் கே.எல்.உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.20A32069-66A5-4DB5-B00B-4C819F81BBB3_L_styvpf EC14D83C-2B6C-49AA-AF4E-D229655373C0_L_styvpf

SHARE