6 வயதுச் சிறுவன் திடீர் மரணம்!

330

காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுவன் ஒருவன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென மரணமானான். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது – கடந்த 18ஆம் திகதி காய்ச்சல் காரணமாக இந்தச் சிறுவன் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தான். காய்ச்சல் மாறாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் காய்ச்சல் அதிகரித்ததை அடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவசர அவசரமாக அம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தான். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை வழங்கியபோதிலும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவன் உயிரிழந்தான் எனத் தெரிவிக்கப்படுகிறது. பண்டத்தரிப்பு சிற்றம்பலம் வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த சிவனேஸ்வரன் டிலிந்தன் (வயது 06) மாணவனே மரணமடைந்தவராவார். மரண விசாரணையை அடுத்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SHARE