2012 ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த பிரதான சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடை குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் உறவினரான 16 வயதுடைய சிறுவன் ஒருவனையும் 18 வயதுடைய இளைஞன் ஒருவனையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் 18 வயதுடைய ரவீந்திரன் சுரேந்திரன் என்ற இளைஞனுக்கே இன்றைய தினம் மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் குசல சரோஜினி வீரவர்தன உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் உறவினரான 16 வயதுடைய சிறுவனை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சமய நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த வேளையிலேயே குறித்த சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.