இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செல்லும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு யூலை மாதம் சுற்றுப்பயணம் செல்லும் அவுஸ்திரேலியா 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் யூலை 26ம் திகதி பல்லேகலேவில் நடக்கிறது.
இந்த தொடருக்காக 15 வீரர்களை கொண்ட அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 6 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட வலுவான அணியாக இது அமைந்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் விபரம்:-
துடுப்பாட்ட வீரர்கள்– ஸ்டீவ் சுமித் (அணித்தலைவர்), டேவிட்வார்னர் (துணைத்தலைவர்), ஜோ பர்ன்ஸ், உஸ்மான் காவாஜ, ஆடம் வோக்ஸ், ஷேன் மார்ஷ்.
சகலதுறை வீரர்கள்– மிட்செல் மார்ஷ், மொய்சஸ் ஹென்றியூக்ஸ், மிட்செல்ஸ்டார்க்.
விக்கெட் கீப்பர்– பீட்டர் நெய்வில்.
பந்துவீச்சாளர்கள்– ஜோஸ் ஹாசில்வுட், ஜாக்சன் பேர்ட், நாதன்கர்ட்லர்-நெய்ல், நாதன் லயன், ஸ்டீவ் ஓ’கெபி.