600 மருத்துவர்களை சித்ரவதை செய்து கொன்ற கொடூரம்

317
600 மருத்துவர்களை சிரியா அரசே படுகொலை செய்துள்ளதாக நியூயோர்க்கை சேர்ந்த மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.சிரியாவில் 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது முதல், இன்று வரை நடைபெற்று வரும் தாக்குதலில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், அரசு படைகள் மருத்துவமனைகளைக் கூட விட்டு வைக்காமல் நடத்திய தாக்குதலின் போது, போரினால் மோசமாக காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களும், அவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி அந்த அமைப்பின் இயக்குனர் ஏரின் ஹல்கர் கூறியதாவது, போரின் போது மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களின் படி போர்க்குற்றம்.

ஆனால் சிரியாவின் அரசுப்படைகள் எதைப்பற்றியும் கவலைபடாமல் மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும் காயம் அடைந்தவர்களை காப்பாற்ற முயன்ற செவிலியர்களையும் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

SHARE