மீண்டும் மிரட்டும் ஐ.எஸ் அமைப்பு

315
அல்லாவின் அடிமைகளான நாங்கள், புதுப்பணிகளுடன் தயாராகவுள்ளோம் என ஐஎஸ் தீவிரவாதிகள் அச்சுறுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.பின்னணியில் அரபு இசை ஒலிக்க, அரபு மொழி வார்த்தைகள் மற்றும் ஆங்கில துணை வாசகங்களுடன் வெளியான அந்த வீடியோவில், ஜிகாதிகள் படுபயங்கரமாக ஆக்ரோஷத்துடன் சண்டையிடும் காட்சிகள் இடம் பெறுகின்றன.

அதுமட்டுமின்றி, ஜிகாதிகளான நாங்கள் கடுமையான, வலுவான மற்றும் மிகவும் உறுதியானவர்கள் என்ற வாசங்கள் இடம்பெறுகின்றன.

அல்லாவின் அடிமைகளான எங்களுக்கு இதைவிட என்ன மரியாதை இருக்கிறது என்ற கேள்வியும் அதில் இடம்பெறுகிறது. மேலும் இறந்துபோன போராளிகள் அல்லாவுடன் சமாதானமாகப்போகிறோம் என்று கூறுவது போன்ற காட்சிகள் உள்ளன.

மேலும், தங்கள் அமைப்பில் இருக்கும் நம்பிக்கையற்ற 15 ஜிகாதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்றுவிடுகின்றனர், இந்த வீடியோவின் முக்கிய நோக்கம் என்னவெனில் புதுப்பணிகள் மற்றும் புதுவித ஜிகாதிகளுடன் தீவிரவாத அமைப்பு தயாராக உள்ளது என்பதாகும்.

SHARE